மேலூர் ஒன்றிய கிராமங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பங்கேற்பு

மேலூர், ஏப். 19: மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் திட்டப் பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழையூர், சாத்தமங்கலம், தனியாமங்கலம், சருகுவலையபட்டி, வெள்ளலூர், உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி ஊராட்சியில் முதல் நாளில் மக்கள் சந்திப்பு மற்றும் திட்டப் பணிகள் ஆய்வினை மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மேற்கொண்டார். அப்போது கிராம மக்கள், ரோடு வசதி, தண்ணீர் வசதி, முதியோர் உதவி தொகை, மாற்று திறனாளிக்கான இலவச பஸ் பாஸ் வசதி, இலவச வீட்டு மனை பட்டா, அங்கன்வாடி, பள்ளி கட்டிடம், மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணி மேற் கொள்வது குறித்து மனுக்களை அளித்தனர்.

அப்போது தோட்டக்கலை துறை சார்பில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு உதவி தொகை, நூறு நாள் பணியாளர்களுக்கு அடையாள அட்டை ஆகியவற்றை எம்பி வழங்கினார். ஊராட்சிக்கு சொந்தமான அங்கன்வாடி, அரசு பள்ளிகளுக்கு சென்று, குழந்தைகள், பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், மதுரை உதவி திட்ட அலுவலர் சாந்தி, மேலூர் தாசில்தார் சரவணபெருமாள், மேலூர் பிடிஓக்கள் பாலச்சந்தர், ஜெயபாலன், மேலூர் யூனியன் துணை தலைவர் பாலகிருஷ்ணன். ஊராட்சி தலைவர்கள் சாத்தமங்கலம் ரெகு, கீழையூர் ஷீலா, தனியாமங்கலம் குமார், சருகுவலையபட்டி அருந்தேவி, வெள்ளலூர் கவுசிகன், உறங்கான்பட்டி மனோகரன், குறிச்சிபட்டி கனகா, வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர்கள் பாலா, பொன்னுத்தாயி, மேலூர் தாலுகா செயலாளர் கண்ணன், தாலுகா குழு உறுப்பினர்கள் மணவாளன், அடக்கி வீரணன், ராஜாமணி, அடைக்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது