மேலூர் அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விநோத திருவிழா

*21 ஆடுகள், நூற்றுக்கணக்கான சேவல்கள் பலியிட்டு விருந்து

மேலூர் : மேலூர் அருகே மழை வேண்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா நேற்று நடைபெற்றது.மேலூர் அருகே புலிப்பட்டியில் உள்ளது ஐந்து கோயில் சுவாமிகளில் ஒன்றான பொன்னு முனியாண்டி கோயில்.இங்கு ஆண்டு தோறும் மழை வேண்டி ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று இந்த திருவிழாவின் ஒரு அங்கமாக நேர்த்தி கடனாக விடப்பட்ட 21 ஆடுகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு, உணவு தயாரிக்கப்பட்டது.

இவை நள்ளிரவு 12 மணியளவில், மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பங்கேற்ற சுமார் 2000 பேருக்கு பறிமாறப்பட்டது.இதில் அனைத்து மதம், சாதியை சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டு உணவு அருந்தினர். இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பொன்னு முனியாண்டி சுவாமி கோயில் வையன்குப்பான் நான்கு கரை அம்பலகாரர்கள் செய்திருந்தனர்.

Related posts

ரூ.26.61 கோடி டெண்டர் ஊழல்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது வழக்கு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தென்மலையில் குவிந்த கேரள மக்கள்: சுற்றுலாத்துறைக்கு ஒரேநாளில் ரூ.3.17 லட்சம் வருவாய்

60 சதவீத பணிகள் நிறைவு; தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணி தீவிரம்: 2025ல் நடத்த திட்டம்