மேலக்கோட்டையூரில் ரூ.17.43 கோடியில் அரசு மாதிரி பள்ளி: முதல்வர் காணொலி காட்சி மூலம் திறப்பு

திருப்போரூர்: மேலக்கோட்டையூரில் ரூ.17.43 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அரசு மாதிரி பள்ளியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். வண்டலூரை அடுத்துள்ள மேலக்கோட்டையூரில் காவல் துறையினர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இவர்களின் குழந்தைகள் படிக்கும் வகையில் போலீஸ் பப்ளிக் ஸ்கூல் தொடங்கப்பட்டது. பின்னர், இப்பள்ளி அரசு மாதிரி பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டு, புதிய இடத்தில் ரூ.17 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இப்பள்ளி கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இந்த பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் 289 மாணவர்கள், 288 மாணவிகள் உள்பட 577 பேர் சேர்ந்துள்ளனர். அதேபோன்று, தமிழ் வழிக்கல்வியில் 44 மாணவர்கள், 34 மாணவிகள் உள்ளிட்ட 78 பேர் சேர்ந்துள்ளனர். மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 655 ஆகும். 30 ஆசிரியர்களின் பணியிடம் முதற்கட்டமாக நிரப்பப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர். மேலக்கோட்டையூர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன், தாழம்பூர் ஆய்வாளர் சார்லஸ், பள்ளி தலைமை ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து