நீர்வரத்து அதிகரிப்பால் தேனி மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: வனத்துறை அறிவிப்பு

தேனி: நீர்வரத்து அதிகரிப்பால் ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த சீசனில் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

மேகமலை அருவிக்கு செல்ல முறையான போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களாக குறைவாகவே காணப்பட்டனர். இந்நிலையில் தற்போது தொடர்மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே குறைவாக இருக்கும் நிலையில் மேகமலை வனத்துறை திடீர் வெள்ளப்பெருக்கை கருத்தில் கொண்டு குளிக்க தடை விதித்துள்ளது. இதனால் மேகமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, நீர்வரத்து குறைந்து சீராகும் வரை மேகமலை அருவியில் குளிப்பதற்கான தடை தொடரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது