டெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு மேற்கொண்டார். அந்த சந்திப்பில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவும் அமர்ந்து பேசி சுமூக தீர்வை எட்ட வேண்டும் என பிரதமர் மோடி யோசனை வழங்கியுள்ளார். இந்நிலையில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.