மேகதாதுவில் புதிய அணையைக் கட்டுவோம்: கர்நாடக ஆட்சியாளர்களுக்கு தஞ்சை விவசாயிகள் கண்டனம்

தஞ்சை: மேகதாதுவில் புதிய அணையைக் கட்டுவோம் என்று கர்நாடக அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி பேசிவருவதற்கு தஞ்சை விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தீபக் ஜெபக் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய விவசாய சங்க பிரதிநிதிகள் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி மாதவாரியான தண்ணீரை வழங்காமல் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையை காட்டுவோம் என கர்நாடக ஆட்சியாளர்கள் தொடர்ந்து பேசி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்காமல் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டின. தற்போது குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவது கவலை அளிப்பதாகவும் கூறினர்.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு