இந்தியா கூட்டணி தலைவர்களுடன் ஜூன் 1ல் கூட்டம் ஏன்? கார்கே விளக்கம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் இறுதி கட்டம் நாளை நடக்கிறது. அன்று டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா மட்டும் அதில் கலந்து கொள்ளவில்லை. அந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றி நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில்,’ ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணும் நாளுக்கான ஏற்பாடுகள் குறித்தும், அன்றைய தினத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசிக்கவே சனிக்கிழமை கூட்டம் நடக்கிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அன்றைய தினம் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருப்பதாகவும், அதனால் பங்கேற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே இது ஒரு சாதாரண சந்திப்பு. இதில் வாக்கு எண்ணும் நாளில் என்ன மாதிரியான தயார்நிலையில் இருக்க வேண்டும், எப்படி உஷாராக இருக்க வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 17சி படிவம் குறித்து பற்றி மட்டுமே விவாதிப்போம். எங்கள் சொந்த நலனுக்காக, எங்கள் தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களுக்கு தகவல்களை வழங்கவும் இந்த கூட்டத்தை நடத்துகிறோம்’ என்று அவர் கூறினார்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்