பூண்டின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பூண்டு உடலுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.பொதுவாக, பூண்டை ரசத்திலோ, சட்னியாகவோ, பொரியலிலோ, குழம்பிலோ சேர்த்துதான் சாப்பிடுவோம். ஆனால், பூண்டை ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் முக்கியமான மூன்று விஷயங்களை பார்ப்போம்.

புற்றுநோய்: புற்று நோய் வராமல் தடுக்க பூண்டு பெரிதும் உதவுகிறது. பூண்டில் ஆர்கனோ – சல்பர் சேர்மங்கள் உள்ளன. இவை மூளை புற்றுநோய், கேன்சர் கட்டிகள் வராமல் தடுக்கின்றன. அதேபோல் புற்றுநோய் வராமல் தடுக்க பூண்டு ஊற வைத்த தண்ணீரும் உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் தோல் நீக்கிய பச்சை பூண்டை சேர்த்து 10 நிமிடம் ஆற விடவும். பின்பு பூண்டுடன் சேர்த்து அந்த நீரை குடித்து வர புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.

சளி மற்றும் இருமல்: இருமல் மற்றும் சளி ஆகியவற்றைத் தடுக்க சில நேரங்களில் பூண்டு நீர் பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் சளியை குறைக்கும் பண்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சளி மற்றும் திடீர் இருமல் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் 1 கிளாஸ் தண்ணீரில் 4 பூண்டு பற்களை சேர்த்து, அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்தவும். பின்பு அதை வெதுவெதுப்பான நிலையில் குடிக்கவும். உடனடி தீர்வு கிடைக்கும். பூண்டு நீர் உங்கள் இதயத்திற்கும் நல்லது. ஏனெனில் பூண்டு இருதய நோய்க்கான காரணிகளைக் குறைக்கிறது. பூண்டு உட்கொள்வது கெட்ட கொழுப்பு அளவுகள், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றையும் குறைக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் எடை குறைப்பு: உடல் எடையை குறைக்க பூண்டு ஊற வைத்த தண்ணீர் மிகவும் உதவுகிறது. இதற்கு முதல் நாள் இரவே பூண்டை சுத்தமான நீரில் ஊற வைக்கவும். காலையில் அந்த நீரை லேசாக சூடுபடுத்தி வெதுவெதுப்பாக வெறும் வயிற்றில் குடிக்கவும். இதுவும் ஒரு இயற்கை டீடாக்ஸ் பானம்தான் இந்த பூண்டு நீர். தொப்பை கரைய, வாயு பிரச்னை சரியாக கொழுப்பு கரைய கைக் கொடுக்கிறது.இயற்கையோடு இணைந்து வாழ்ந்தாலே 100 வயது வரை நோய் இல்லாமல் வாழலாம்.

Related posts

புற்றுநோயோடு போராடிய மருத்துவர்!

தொண்டைப் புண் குணமாக எளிய வழிகள்!

முழங்கை வலி காரணமும் – தீர்வும்!