மருத்துவ மாணவி கொலையை கண்டித்து அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

செங்கல்பட்டு: கொல்கத்தாவில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொலை செய்துள்ளதை கண்டித்து அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மேற்குவங்கத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிக்கர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். அதே மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராக இருந்து வரும் மாணவியை கடந்த 8ம் தேதியன்று ஆர்ஜிக்கர் கல்லூரி செமினார் ஹாலில் வைத்து அந்த மாணவியை கட்டாய பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். இந்த கொலையில், கொல்கத்தா போலீசார் இதுவரை உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்கவில்லை. பொதுவாகவே இளம்பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை.

அதிலும், மக்களின் உயிரை காப்பாற்றக்கூடிய மருத்துவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. முதலில் தாக்கினார்கள், கொலைமிரட்டல் விடுத்தார்கள், தற்போது நேரடியாக கொலை செய்வதில் இறங்கியுள்ளார்.
இது தொடர்ந்து நீடித்தால் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அறவே இருக்காது என இதனை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கொல்கத்தாவில் கொல்லப்பட்ட மேற்குவங்க மாணவி கொலைக்கு கண்டனம் தெரிவித்து உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பதாகையை கையில் ஏந்தியவாறு அந்த மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என கோஷமிட்டபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்