மருத்துவ விடுப்பு எடுத்துகொண்டு பாஜ மறியலில் பங்கேற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்: மருத்துவ விடுப்பு எடுத்து பாஜ மறியல் போராட்டத்தில் பங்கேற்ற போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய முதல்நிலைக் காவலர் கார்த்திக். இவர் கடந்த ஆக. 15ம் தேதி, மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை எனக்கூறி பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அவர் பாஜ மாவட்ட தலைவர் தரணி முருகேசனை சந்தித்து, தன்னை அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து பணிக்குச் செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் பாஜவினர் நடத்திய மறியலில் பங்கேற்று கைதானார். இதனையடுத்து காவலர் பணியில் இருந்து கொண்டு, அரசியல் கட்சி போராட்டத்தில் பங்கேற்றதற்காக கார்த்திக்கை, எஸ்பி தங்கதுரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்