தமிழ்நாட்டில் இருந்து வயநாட்டிற்கு மருத்துவ குழு அனுப்பி வைப்பு: அமைச்சர் தகவல்


சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமவனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜ.ஐ.சி.ஏ) நிதியுதவியுடன் ₹358.87 கோடியில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ள புதிய மருத்துவமனை கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏறத்தாழ ₹358.87 கோடியில் 2,68,815 சதுர அடி பரப்பில் 6 தளங்களை கொண்டு, 441 படுக்கைகளுடன் புதிய கட்டிடப் பணிகள் நடந்து வருகின்றன.

அத்துடன், உலக வங்கி நிதி ஆதாரத்துடன் ₹125 கோடியில் டவர் பிளாக் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம், வயநாட்டிற்கு நேற்று உதகமண்டலம் மாவட்டத்தில் இருந்து 2 வாகனங்களின் மூலம் 10 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கூடுதல் உதவிகள் தேவைப்பட்டால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் அனுப்பி உதவிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

தேனியில் டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு

செப் 09: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

சொல்லிட்டாங்க…