மெடிக்கலில் ஊசி போட்ட மாணவன் பரிதாப பலி: கடைக்காரர் கைது

ஆத்தூர்:சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடியை சேர்ந்தவர் ஜெகதீஷ் மகன் கீர்த்திவாசன்(13). அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மார்ச் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்ட கீர்த்திவாசனுக்கு அப்பகுதியில் உள்ள மெடிக்கல் கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளனர். மெடிக்கல் கடை நடத்தி வரும் செந்தில்குமார் (26), மார்ச் 21ம்தேதி கீர்த்திவாசனுக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி உள்ளார்.

ஆனால், மீண்டும் மாணவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கீர்த்திவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், தவறான ஊசி மருந்து செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டு மாணவன் இறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மெடிக்கல் கடை உரிமையாளர் செந்தில்குமாரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.

Related posts

வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களாக 133 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க எதிர்க்கட்சிகள் மனசாட்சியை தொட்டு ஆலோசனை வழங்க வேண்டும்: அமைச்சர் முத்துசாமி வேண்டுகோள்