தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று மருத்துவ காப்பீடு முகாம்: அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 100 இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு முகாம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ காப்பீடு முகாம் நடைபெற உள்ளது. புதியதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைப்பதற்கு ஏதுவாக நடக்கிறது.

சென்னையில் ராயபுரம், அடையார், மயிலாப்பூர், அயனாவரம், நீலாங்கரை உள்ளிட்ட 5 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. மழை அதிகம் உள்ளதால் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் இன்று 2000 இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தற்காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

பேப்பர் கிடங்கில் தீ விபத்து

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம்

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு