மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு எய்ம்சில் மருத்துவ பரிசோதனை

புவனேஷ்வர்: ஒடிசாவில் நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்துவதை கருத்தில் கொண்டு ஏப்ரல் 2ம் தேதி ஐஜி ஆசிஷ்குமார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதே நேரத்தில் அவர் முதல்வரின் பாதுகாப்புக்காக மாநில அரசால் நியமிக்கப்பட்டார்.  இந்நிலையில் ஏப்ரல் 5ம் தேதி மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ்குமார் பிஜூ ஜனதா தளத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக பாஜ தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. இதனை தொடர்ந்து மே 4ம் தேதி முதல் ஆசிஷ்குமார் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ்குமாருக்கு மருத்துவபரிசோதனை செய்து இன்றைக்குள் அறிக்கை சமர்பிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து புவனேஷ்வர் எய்ம்ஸ் இயக்குனரால் அமைக்கப்பட்ட சிறப்பு குழு மூலமாக அதிகாரிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று காலை 8.30மணிக்கு எய்ம்ஸ் சென்ற ஆசிஷ்குமாருக்கு பிற்பகல் ஒரு மணி வரை மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்