கடந்த 2.5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மருத்துவ சேவை 3 மடங்கு அதிகரித்துள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கன்னியாகுமரி: கடந்த 2.5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மருத்துவ சேவை 3 மடங்கு அதிகரித்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தடைந்தார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு அங்குள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான புதிய அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று அதிகாலை 4 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் இருந்து காணிமடம் வரை உள்ள 21.4 கிலோ மீட்டர் தூரம் நடந்த தனிநபர் மினி மாரத்தானில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். பின்னர் கன்னியாகுமரி தொல்லவிளை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி ஆய்வக சேவை தொடங்கி வைக்கப்பட்டு, சிறார் நலத்திட்ட மருத்துவ குழுவிற்கு இணைய இணைப்புடன் கைக்கண்ணி வழங்கினார்.

கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ 24.55 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்கள் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் ரூ 8.90 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.  இதை தொடர்ந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை 2 நாளை வழங்கப்படுகிறது. 983 மருந்தாளுநர்கள், 1,266சுகாதார ஆய்வாளர்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் தேவை என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு