குளிக்க சென்றபோது தண்ணீரில் தவறி விழுந்து மெக்கானிக் பலி

ஆவடி: மெக்கானிக் கிணற்றில் குளிக்க சென்றபோது நீரில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார். ஆவடி அடுத்த பங்காருபேட்டை பகுதியை சார்ந்தவர் அஜித் (27). மெக்கானிக். இவரது பெற்றோர்கள் இறந்த நிலையில் தனது அத்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை இவரது மெக்கானிக் கடைக்கு விடுமுறை விட்டுவிட்டு அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது கிணற்று படிக்கட்டில் பாசிகள் அதிக அளவில் இருந்ததால் குளிக்கும் பொழுது கால் வழுக்கி தவறி விழுந்ததில் நீரில் மூழ்கினார். இவரது அத்தை நேற்றுமுன்தினம் மாலையிலிருந்து அஜித்தை காணவில்லை என பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சென்று பார்த்தபோது மெக்கானிக் அஜித் அணிந்திருந்த உடைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடிய போது அஜித் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.  இது குறித்து, டேங்க் பேக்டரி போலீசார் அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

குடிநீர் சுத்திகரிப்பு கருவி பழுதை சரி செய்வதாக கூறி மொபைல் செயலி மூலம் ரூ.1 லட்சம் அபேஸ்

மேம்பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி மறியல்

புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது