மயிலாடுதுறையில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க 4-வது நாளாக வனத்துறை தீவிரம்

மயிலாடுதுறை: சித்தர்காட்டில் மேலும் ஒரு ஆட்டுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆட்டின் தலை மற்றும் முன்கால்கள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மயிலாடுதுறை பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை பிடிக்க 4-வது நாளாக வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு உள்ளிட்ட இடங்களில் கூண்டுகளை வைத்து வனத்துறை கண்காணித்து வருகின்றனர். 10 இடங்களில் சென்சார் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை வைத்து வனத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது