மயிலாடுதுறை கலெக்டருக்கு திடீர் நெஞ்சுவலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, நேற்றுமுன்தினம் காலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து மதியம் முகாம் அலுவலகம் சென்ற கலெக்டருக்கு, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்றுமுன்தினம் இரவு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்று அதிகாலை சென்னை அப்ேபாலோ மருத்துவமனையில் கலெக்டர் மகாபாரதியை பரிசோதித்த மருத்துவர்கள் இதயக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அவருக்கு ஆன்ஞ்சியோ மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டு தற்போது உடல் நலம் தேறியிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு