மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மன்னம்பந்தல் அருகே மூங்கில் தோட்டத்தில் ரூ.115 கோடியில் கட்டிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.655 கோடி மதிப்பிலான திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.