மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் 90,000 குறுவை பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் குறுவை பயிர்கள் சேதநடந்துள்ளன. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நகை ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் இன்று குறுவை பயிர்கள் காய்ந்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சுமார் 90,000 ஏக்கர் குறுவை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது 20 நாட்களாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில் நேற்று இரவு பலத்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் மழை நீரில் நாசமாகின.

நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் நெற்பயிர்களை விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், வானிலை ஆய்வும் மையம் அடுத்த 3 நாட்களுக்கு மழை வரும் என்று தெரிவித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்ட முழுவதும் 90,000 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யவேண்டிய பயிர்கள் தற்போது மழையில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடரும் கனமழையால் நெற்கதிர் பாதி முற்றிய நிலையில் இருக்கும் பயிர்களும் வயலில் சாயத்தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

Related posts

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!

ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு

மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த குட்டி யானை: பயணிகள் அச்சம்