மே 19 முதல் 24ம் தேதி வரை 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

புதுடெல்லி: பிரதமர் மோடி மே 19 முதல் 24ம் தேதி வரை ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி மே 19ம் தேதி முதல் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுபற்றி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 19ம் தேதி ஜப்பான் செல்லும் அவர் அங்கு ஹிரோஷிமா நகரில் நடக்கும் ஜி7 நாடுகள் மாநாட்டில் மே 21ம் தேதி வரை பங்கேற்கிறார். அந்த கூட்டத்தில் அமைதி, நிலைத்தன்மை, உணவு, உரம், உற்பத்தி பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். அதை தொடர்ந்து பப்புவா நியூ கினியா நாட்டில் போர்ட் மோர்பே நகருக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு மே 22ம் தேதி இந்தியா-பசிபிக் கூட்டுறவு கூட்டத்தில் உரையாற்றுகிறார். இறுதிகட்டமாக மே 22 முதல் 24ம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு செல்லும் அவர் அங்கு குவாட் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது அமெரிக்க அதிபர் பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்து பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்