5வது மாடியில் இருந்து விழுந்த 85 வயது மூதாட்டி உயிரிழப்பு

பெரம்பூர்: புளியந்தோப்பு பி கே காலனி 10வது பிளாக், 5வது மாடியில் வசித்து வந்தவர் சந்திரா (85). இவருக்கு மூன்று மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சந்திராவை அவரது 4வது மகளான கண்ணகி குடும்பத்தினர் கவனித்து வந்தனர். சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் சந்திரா அவதிப்பட்டு வந்துள்ளார். இவரது உடல்நிலை காரணமாக 5வது மாடியில் இருந்து கீழே வரமாட்டார். அவருக்கு தேவையான உணவுகளை கண்ணகியின் குடும்பத்தினர் கொடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் சந்திரா 5வது மாடியில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக சந்திராவை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சந்திரா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு