முதுநிலை நீட் வழக்கு-தலைமை நீதிபதி அமர்வு விசாரணை

டெல்லி: முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. வினாத்தாள் வெளியாகி விற்பனைக்கு வந்ததாக தகவல் பரவியதை அடுத்து தேர்வை ஒத்திவைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. முதுநிலை நீட் தேர்வை ஒரே அமர்வில் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பை குறுகிய காலத்தில் வெளியிட்டதால் மாணவர்கள் அங்கு சென்று சேருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறுகிறது.

Related posts

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

ஹிஸ்புல்லா தலைவர் கொலையை கண்டித்து ஸ்ரீநகரில் ஷியா பிரிவினர் போராட்டம்: மாஜி முதல்வர் பிரசாரம் ஒத்திவைப்பு

கேரளாவில் கைது செய்யப்பட்ட ரவுடி எஸ்டேட் மணி வேலூர் சிறையில் அடைப்பு