முதுநிலை மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான தரவரிசைபட்டியல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு

சென்னை: சென்னை, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், 2023-24ம் கல்வியாண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பிற்கு அரசு பள்ளி மாணவர்கள் 7.5% உள் இட ஒதுக்கீடு ஆணை மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்கள் ஒதுக்கீடுக்கான ஆணைகள் வழங்கி, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 2023-2024ம் கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் மற்றும் நிர்வாக இடங்கள் ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. நேற்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஓதுக்கீட்டின் கீழ் 7526 விண்ணப்பங்களும், அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஓதுக்கீட்டின் கீழ் 3036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எம்டிஎஸ் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஓதுக்கீட்டில் 661 விண்ணப்பங்களும், எம்டிஎஸ் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஓதுக்கீட்டில் 336 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அரசு ஒதுக்கீட்டின் கீழ் 676 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 499 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 5ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக நடைபெறும். பிற தகவல்களுக்கு மாணவர்கள் tnmedicalselection.net மற்றும் tnhealth.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிடிஎஸ் என்று 19 வகையான 4 வருட பட்டப்படிப்புகளுக்கு மொத்தம் 66,696 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் வரும் ஆகஸ்ட் 14ம் ேததி கலந்தாய்வு தொடங்கும். அதை தொடர்ந்து மற்ற பட்டய படிப்புகளான பார்ம டி, டிப்ளமோ நர்சிங் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. சர்டிபிகேட் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் விரைவில் விண்ணப்பங்கள் கோரப்படும். இதற்கான கலந்தாய்வு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும்.

Related posts

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு