அனைத்து வித சமையலின் அச்சாணி…

அனைத்து வித சமையலின் அச்சாணி எது என்றால் அது நிச்சயம் கடுகாகத்தான் இருக்கும். குழம்பு, கிரேவி, பொரியல், சட்னி, ஃப்ரைடு ரைஸ் என எந்த உணவைச் செய்தாலும் அதில் கடுகின் துணை கட்டாயம் இருக்கும். இத்தகைய முக்கியத்துவம் மிகுந்த கடுகு குறித்த சில ஸ்பெஷல் தகவல்களைத் தெரிஞ்சிக்கோங்க!கடுகு பொதுவாக வெண்கடுகு, கருநிற கடுகு என இரண்டு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. வெண்கடுகுக்கு மத்திய தரைக்கடல் பகுதிதான் பிறப்பிடம். கருப்பு நிற கடுகுக்கு இந்தியாதான் பூர்வீகம். குறிப்பாக இமயமலைதான் நம்ம ஊர் கடுகு பிறந்து வளர்ந்த தாய்மண். இந்த இரண்டு வகை கடுகுகளுமே நீண்ட காலமாக சமையலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கி.மு 3000க்கு முன்பே இந்தியாவில் கடுகு பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் பல நூல்களில் நிறைந்திந்திருக்கின்றன. சாகாவரம் குறித்து ஒருவர் பேசியபோது, மரணம் நிகழாத ஒரு வீட்டிலிருந்து கடுகு வாங்கி வா என்று புத்தர் கூறியதாக ஒரு கதை இருக்கிறது. அதேபோல சுமேரியாவின் நூல்களிலும் கடுகு குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடுகுச்செடிகள் குறித்து கிரேக்க மற்றும் ரோமானிய நூல்களிலும், பைபிளிலும் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன.

புதிய ஏற்பாட்டில் சிறிய கடுகுவிதை விசுவாசத்தின் சின்னமாக இருக்கிறது.கடுகு விதை சில நாடுகளில் மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவி இருக்கிறது. 20ம் நூற்றாண்டில்தான் கடுகு ஒரு மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது என்றும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்று சர்வதேச சந்தையில் கடுகுக்கு ஒரு முக்கிய இடம் கிடைத்திருக்கிறது. இது உலகின் மிதமான பகுதிகளில், முக்கியமாக கனேடிய மற்றும் அமெரிக்காவில் உள்ள பெரிய அளவிலான சமவெளி களில் பயிர் செய்யப்படுகின்றன. ஹங்கேரி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் குறைந்த அளவுகளில் சாகுபடி செய்யப்படுகிறது. கடுகு பல்வேறு விதமான சமையல்களில் நறுமணமூட்டியாகவும், சுவைக்கு ஆதாரமாகவும் செயல்படுகிறது. காரம் மிகுந்த கறுப்பு நிற கடுகு பிரெஞ்சு உணவுகளில் பேஸ்ட்டாக பயன்படுத்தப்படுகிறது. மிதமான காரம் கொண்ட வெள்ளை நிறக் கடுகு அமெரிக்க மற்றும் ஜெர்மன் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு வகைகளும் இங்கிலாந்து உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. கடுகு கொண்டு தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டுகள் இறைச்சிகள், ஃப்ரூட் மற்றும் வெஜ் சாலட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது மயோனைஸ், சாஸ்கள் மற்றும் ஊறுகாய்களில் ஒரு மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

 

Related posts

“ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்” : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்