மசரட்டி நிறுவனம் கிரேகாலே எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம்

மசரட்டி நிறுவனம் கிரேகாலே என்ற எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது 3 வித இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. துவக்க வேரியண்டில் 2 லிட்டர் 4 சிலிண்டர் மைல்டு ஹைபிரிட் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 296 பிஎச்பி பவரையும், 450 என்எம் ாடர்க்கையும் வெளிப்படுத்தும். டாப் வேரியண்டில் 3 லிட்டர் வி6 டர்போ இன்ஜின் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக 528 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.1.31 கோடி. டாப் வேரியண்ட் ரூ.2.05 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

அதிகம் லாபம் தரும் செம்மறி ஆட்டு கிடாய்கள்

கட்டிமேடு அரசுபள்ளியில் சர்வதேச ஓசோன் தின உறுதிமொழி ஏற்பு

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 118 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு