மா.கம்யூ உறவை முடிவுக்கு கொண்டு வராமல் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடியாது: மம்தா பானர்ஜி திடீர் அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மா.கம்யூ. கட்சி உடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வராமல் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முடியாது என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையில், ‘மா.கம்யூ. கட்சிக்கு சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் இல்லை என்று பலமுறை காங்கிரசிடம் கூறப்பட்டது. காங்கிரசுக்கு இரண்டு லோக்சபா தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளோம். ஆனால் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கேட்கிறது.

மா.கம்யூ. கட்சி உடனான கூட்டணியை முடிவுக்கு கொண்டு வராமல், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பற்றி யோசிக்க தேவையில்லை. மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு என்பது காங்கிரசின் நிலைப்பாட்டை பொறுத்தே அமையும். காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் இடையிலான விரிசலுக்கு மா.கம்யூ. கட்சி தான் காரணம். எனவே வரும் லோக்சபா தேர்தலில் மேற்குவங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும். மேற்குவங்காளத்தில் மா.கம்யூ. – காங்கிரஸ் இடையே கூட்டணி உள்ளது. மா.கம்யூ. கட்சியை பொறுத்தமட்டில், அந்த கட்சியானது ஒரு பயங்கரவாத அமைப்பு. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை மா.கம்யூ கட்சியினர் காயப்படுத்தியதை மறக்கமாட்டேன்’ என்றார்.

Related posts

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது