கல்வி கொள்கை உயர்மட்ட குழு அரசு அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு

சென்னை: கல்விக்கொள்கை உயர்மட்டக்குழு தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது..இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு நிலைமைகளுக்கேற்ப தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிட நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்தது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பெரும் பாராட்டைப் பெற்றதுடன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விஞ்ஞான அடிப்படையிலான கல்வி கிடைத்திட நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டிற்கு என ஒரு தனித்துவமான மாநிலக் கொள்கையை உருவாக்கும் பணியில் இக்குழு ஈடுபடும்.

குழுவின் அறிக்கை வரப்பெற்றதும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நம்மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்பதுடன், மேலும் காலதாமதம் செய்யாமல் விரைவில் அறிக்கையைப் பெற்று அதன் மீது சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்