இன்விக்டோ என்ற எம்பிவியை அடுத்த மாதம் 5ம் தேதி அறிமுகம் செய்ய மாருதி சுசூகி திட்டம்..!!

மாருதி சுசூகி நிறுவனம், இன்விக்டோ என்ற எம்பிவியை அடுத்த மாதம் 5ம் தேதி அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. எனினும், இதற்கான முன்பதிவுகள் தொடங்கி விட்டன. நெக்ஸா இணையதளத்தில் அல்லது ஷோரூமில் ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய எம்பிவி, டொயோட்டா இனோவா ஹைகிராசை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

டொயோட்டா மற்றும் மாருதி இணைந்து வெளியிட்டுள்ள 4வது கார் இதுவாகும். டொயோட்டா நிறுவனம் மாருதியின் பலேனோவை கிளான்சா என்ற பெயரிலும், விட்டாரா பிரஸ்ஸாவை அர்பன் குரூஸர் என்ற பெயரிலும் விற்பனை செய்கிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள இன்விக்டோவின் ஷோரூம் விலை, வேரியண்டுக்கு ஏற்ப சுமார் ரூ.18 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். இந்த காரில் இனோவா ஹைகிராசில் உள்ள 2.0 லிட்டர் விவிடிஐ பெட்ரோல் இன்ஜின் இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்