மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் வெலாசிட்டி

மாருதி சுசூகி நிறுவனம், ஃபிரான்க்ஸ் வெலாசிட்டி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது இந்த கார் 1.2 லிட்டர் டூயல் ஜெட் டூயல் விவிடி பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பூஸ்டர்ஜெட் பெட்ரோல் இன்ஜின் என இரண்டு வித இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 113 என்எம் டார்க்கையும், 1.0 லிட்டர் இன்ஜின் 147.6 என்எம் டார்க்கையும் வளெிப்படுத்தும். இதுதவிர சிஎன்ஜியுடன் கூடிய 1.2 லிட்டர் டூயல் ஜெட் விவிடி பெட்ரோல் இன்ஜின் தேர்விலும் கிடைக்கும். சிஎன்ஜியில் 98.5 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். ஷோரூம் விலை சுமார் ரூ.7.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாருதி சுசூகி, பலேனோ அடிப்படையில் ஃபிரான்க்ஸ் என்ற எஸ்யுவியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்திருந்தது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,34,735 கார்களை விற்பனை செய்திருந்தது. நடப்பு நிதியாண்டு துவக்கத்தில் ஏப்ரலில் மட்டும் 14,286 கார்கள் விற்பனையாகியிருந்தன. அறிமுகம் செய்து 14 மாதங்கள் கடந்த நிலையில் 1.5 லட்சம் கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது. சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், டெல்டா பிளஸ் ஓ, ஜெட்டா, ஆல்ஃபா என 6 டிரிம்களில் கிடைக்கிறது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.7.52 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.12.88 லட்சம்.

Related posts

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி