மாருதி சுசுகி நிறுவனம் இக்னிஸ் ரேடியான்ஸ் என்ற ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. மாருதியின் சிக்மா காரை அடிப்படையாகக் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் உள்ள 1. 2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 83 எச்பி பவரை வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய தேர்வுகளில் கிடைக்கிறது. சிக்மா வேரியண்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் இதன் விலை சிக்மாவை விட ரூ.35,000 குறைவு. துவக்க ஷோரூம் விலையாக, சுமார் ரூ.5.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர 15 அங்குல வீல் கவர்கள், டோர் வைசர்கள் என ரூ.3,650 மதிப்பிலான உதிரி பாகங்களை வழங்குகிறது. ஜெட்டா மற்றும் அல்பா ஆகிய வேரியண்டிலும் இந்த ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும். இவற்றுடன் ரூ.95,000 மதிப்புள்ள உதிரி பாகங்கள் இலவசமாக வழங்கப்படும்.