மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் அவர்களது திருவுருவப்படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில் அவர்களது திருவுருவப்படத்துக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த 1965ம் ஆண்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. எத்தனையோ உயிர்களை பலி கொண்ட அந்த போராட்டம், வரலாற்று அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் காங்கிரஸை வீழ்த்தி, திமுக ஆட்சியை பிடிக்க இந்த போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கடந்த 1965 ஜனவரி 25ம் தேதி திமுக சார்பில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் நடைபெற்ற போராட்டம் உச்சக்கட்ட தீவிரத்தையும் எட்டியது.. பின்னர், அடுத்தடுத்த நாட்களில் போராளிகள், மொழிக்காக தீக்குளித்து கருகினர். இந்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வருடந்தோறும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், வெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி