திருமணமான பெண்களை பணியமர்த்த மறுக்கும் FOXCONN நிறுவனம்.. தமிழக அரசிடம் அறிக்கை கேட்கும் ஒன்றிய அரசு

சென்னை : FOXCONN தொழிற்சாலையில் திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு தமிழ்நாடு அரசை ஒன்றிய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத் தொழிற்சாலையில் திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்புதாக செய்தி வெளியானது.

இது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தமிழக அரசுக்கு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்த வித பாகுபாடும் காட்டக்கூடாது என 1976ல் சம ஊதியச் சட்டம் 5வது பிரிவு தெளிவாக எடுத்து உரைப்பதாகவும் இந்த சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கு உரிய அதிகாரம் கொண்டது மாநில அரசு என்பதால் அதனிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மண்டல தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே திருமணம் ஆகாத பெண்களை விட திருமணமான பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு உட்பட குடும்ப பொறுப்புகள் அதிகம் இருக்கும் என்ற காரணத்தால் பணியில் சுணக்கம் ஏற்படும் என கருதி வேளைக்கு அமர்த்துவதில்லை என ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முன்னாள் மனித வள அதிகாரி ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மாணவன் மாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்