திருமணம், பெண் முன்னேற்றம் மற்றும் பிற சமூக அவலங்களுக்காக போராடியவர் பாரதியார்: காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புகழாரம்

டெல்லி: திருமணம், பெண் முன்னேற்றம் மற்றும் பிற சமூக அவலங்களுக்காக போராடியவர் பாரதியார் என்று பாரதியாரின் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து கூறியுள்ளார். எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளர்களின் ஆசானும், சமூகப் புரட்சியாளரும், தேசப் பக்தர்களின் முன்னோடியும், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக விளங்கிய மாபெரும் போராளியான மகாகவி பாரதியார், கடந்த 1882ம் ஆண்டு இதே நன்னாளில்தான், எட்டயபுரத்தைச் சேர்ந்த சின்னசாமி சுப்ரமணிய ஐயர்- இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

பெற்றோர் அவருக்கு இட்டபெயர் சுப்ரமணி. ஆனால் 11வது வயதில் கவிபாடும் ஆற்றலினால், எட்டயபுரம் மன்னரால் பாரதி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அன்று முதல் சுப்பிரமணிய பாரதி என அழைக்கப்பட்டார். தன் வாழ்நாள் முழுவதும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக, எழுத்துகளால் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளராக, பாரதியார் திகழ்ந்தார்.

இந்நிலையில், பாரதியாரின் பிறந்தநாளை ஒட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தலைசிறந்த தேசியவாதி, தமிழ் இலக்கியத்தின் முன்னோடி பாரதியாருக்கு பணிவான வாழ்த்துக்கள். சாதி வேற்றுமை, பழங்குடியினருக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்த கவிதை, பாடல்களை எழுதியவர் பாரதி. குழந்தை திருமணம், பெண் முன்னேற்றம் மற்றும் பிற சமூக அவலங்களுக்காக போராடியவர் பாரதியார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது