திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்

அண்ணாநகர்: திருமணம் செய்துகொள்வதாக கூறி சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய பேஸ்புக் காதலனை தேடி வருகின்றனர். இதுசம்பந்தமாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பகீர் தகவல்கள் கிடைத்துள்ளது. சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பெற்றோர், தனது 17 வயது மகள் காணவில்லை என்று கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன்படி, போலீசார் சிறுமியின் செல்போன் நம்பரை வைத்து டவர் மூலம் கண்காணித்தபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் சிறுமி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் போலீசார் சென்று அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியைமீட்டு அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுபற்றி சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி கூறுகையில்,
‘’பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்ட வினோத் என்பவர் தன்னை காதலிப்பதாக கூறியதுடன் திருமணம் செய்துகொள்வதாக கூறினார். இதை நம்பியதால் என்னை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதன்பின்னர் வினோத் தனது நண்பர்கள் அஜித்(21), ஜீவா(21) ஆகியோருடன் சேர்ந்து தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார்’ என்று தெரிவித்து உள்ளார். இதன் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரித்து வினோத், அவரது நண்பர்கள் ஜீவா, அஜித் ஆகிய 3 பேர் மீது கடத்தல், போக்சோ சட்டம் உட்பட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். நேற்றிரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஜீவா, அஜித் ஆகியோரை கைது செய்து இன்று அதிகாலை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கு தொடர்பாக பேஸ்புக் காதலன் வினோத்தை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

‘’சமூகவலைதள பக்கத்தில் இளம்பெண்கள், சிறுமிகள் ஆகியோர் ரொம்ப உஷாராக இருக்கவேண்டும். காதல் வலையில் சிக்கவேண்டாம் என்று போலீசார் சார்பில் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மீண்டும் , மீண்டும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலம் சிறுமிகள் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இளம்பெண்கள், சிறுமிகள் ஆகியோர் சமூகவலைதள பக்கத்தில் மிகுந்த கவனமுடன் இருக்கவேண்டும்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

Related posts

திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்; அகில இந்திய பிரச்னையாக நீட் தேர்வு விவகாரம் மாறியுள்ளது.! நிச்சயம் நல்ல முடிவு வரும் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டி

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்வு: மாநிலங்களவையில் இரங்கல்

கீழடி அகழாய்வில் பெரிய அளவில் செப்பு பொருட்கள் கண்டெடுப்பு