திருமணமாகி கருத்தரிக்காததால் மனைவியை நிர்வாணப்படுத்தி கத்தியால் குத்திய கணவர்: பெற்றோர் உட்பட 6 பேர் மீது வழக்கு

பிலிபிட்: திருமணமாகி கருத்தரிக்காததால் தனது மனைவியை நிர்வாணப்படுத்தி கத்தியால் குத்திய கணவர், பெற்றோர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் சுங்கர்ஹி பகுதியை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 2014ல் பிசல்பூர் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபருடன் திருமணம் நடந்தது. ஆனால் அந்தப் பெண் கருத்தரிக்காததால் அவரை அவரது கணவரும், குடும்பத்தினரும் துன்புறுத்தி வந்துள்ளனர். வரதட்சணையாக ரூ. 5 லட்சம், புதிய கார் கேட்டு அடித்து உதைத்துள்ளனர்.

அவ்வப்போது கருத்தரிக்காத பிரச்னையை எழுப்பி, அந்தப் பெண்ணுக்கு பல வகைகளில் பிரச்னைகளை கொடுத்து வந்தனர். அந்தப் பெண்ணின் கணவர், இயற்கைக்கு மாறான முறை உடலுறவுக்கு கட்டாயப்படுத்தி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் ஒவ்வொரு இரவும் அந்தப் பெண்ணை நிர்வாணப் படுத்தி கொடுமை படுத்தி வந்துள்ளார். மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணின் கணவருக்கு உடல் ரீதியான பிரச்னைகள் இருந்துள்ளன. அதனால் அந்தப் பெண்ணால் கருத்தரிக்க முடியவில்லை என்பதும் உறுதியானது.

இதனை சகித்துக் கொள்ள முடியாத அந்தப் பெண்ணின் கணவர், குடிபோதையில் அவரை தாக்கினார். பின்னர் கத்தியால் குத்தி காயப்படுத்தினர். படுகாயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் அந்தப் பெண்ணிடம் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி அசுதோஷ் ரகுவன்ஷி கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது கணவர் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். அந்தப் பெண்ணின் கணவர், கணவரது பெற்றோர், அவரது மூன்று சகோதரர்கள் என ஆறு பேர் மீது ஐபிசி பிரிவுகள் 354, 307, 377, 323, வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறோம்’ என்றார்.

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்