தனது CSR முயற்சிகளை மெரினா கடற்கரையை சுத்தம் செய்தல் மற்றும் மரக்கன்றுகள் விநியோகம் மூலம் பிரகாசமாய் முன்னெடுத்துள்ளது ஜெப்ரானிக்ஸ் நிறுவனம்

சென்னை: இந்தியாவின் முன்னோடி தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், ஆடியோ மற்றும் நுகர்வோர் மின்னணுவியல் பிராண்டான ஜெப்ரானிக்ஸ், கடல் சூழலைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் இயக்கத்தை மெரினா கடற்கரையில் நடத்தி, தனது Zeb-EnvironmentCSR முன்முயற்சியின் ஒரு பகுதியாக பசுமையான எதிர்காலத்தை ஊக்குவிக்க தாவர மரக்கன்றுகளை விநியோகித்தது. இந்த இயக்கம் மெரினா கடற்கரையில் தூய்மையைப் பேணும் நோக்கத்துடன், பலவீனமான இச்சுற்றுச்சூழல் அமைப்பில் கொட்டப்படும் குப்பை/கழிவுகளின் தாக்கத்தையும் அதைத் தடுப்பதற்கான வழிகளையும் குறித்து கூட்டத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

ஊழியர்கள், தன்னார்வத் தொண்டர்களை உள்ளிட்ட கிட்டத்தட்ட 200 ஜெபீக்கள், தங்கள் உழைப்பை முறைப்படுத்தி சுமார் 300 கிலோ கழிவுகளை வகை வகையாகப் பிரித்து மறுசுழற்சிக்காகவும் பாதுகாப்பாக அகற்றுவதற்காகவும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இயக்கத்தின் முடிவில், பங்கேற்பாளர்களிடையே சுய-தன்ணுணர்வும், விழிப்புணர்வும், நன்றியுணர்வும் எழுச்சியுடன் வியாபித்திருந்தது. ஜெப்ரானிக்ஸ் பிரச்சாரமானது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான தற்போதைய தேவையை எதிரொலித்து, கடலோர வளங்களைப் பாதுகாப்பதன் தீவிரமான முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஜெப்ரானிக்ஸ் தனது CSR கொள்கையுடன் இசைந்து, Zeb-Environment, Zeb-Tech, Zeb-Learn மற்றும் Zeb-Health முன்முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக சார்ந்த அதிகாரமளித்தல் ஆகியவற்றில் பங்களிப்பதில் வலுவான செயல்பாட்டுப் பதிவுகளைக் கொண்டுள்ளது. இந்த கடற்கரையை தூய்மைப்படுத்தும் இயக்கமானது நிலைத்தன்மையுடைய வளர்ச்சி மீது அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும். நிகழ்ச்சியில் பேசிய ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் இணை நிறுவனருமான திரு. ராஜேஷ் தோஷி கூறியதாவது: பொறுப்பான பெருநிறுவன குடியுரிமையின் வலுவான கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஜெப்ரானிக்ஸ் அறக்கட்டளை, எதிர்கால சந்ததியினருக்கான சிறந்த எதிர்காலத்திற்கும் நிலைத்தன்மையுள்ள சூழலுக்கும் பங்காற்றும், அக்கறை செலுத்துதல் கோட்பாட்டின் தத்துவத்தை நம்புகிறது.

தனது இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகளில் ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கும் அழகிய கடற்கரை நகரமான சென்னையில், கடற்கரைகளைச் சுத்தம் செய்வதன் அவசியத்தை இயல்பாக்குவதும் கடற்கரைகளை மாசுபடுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு போதிப்பதும் எங்களுக்கு மிகவும் தவிர்க்கவியலாததாக இருந்தது. இளைஞர்கள் முனைப்புடன் ஈடுபடுவது இந்த இயக்கங்களின் ஒரு சிறந்த அம்சமாகும். தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கையின் மூலமும் இந்த முன்முயற்சிகளிலும் “எப்போதும் முன்னோக்கிச் செல்லும்” உத்வேகத்தின் மூலமும் அர்த்தமுள்ள மாற்றங்களை நாம் தொடர்ந்து கொண்டுவருவோம்.

Related posts

ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்