மெரினாவில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியையொட்டி சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தாமதமாகும் என அறிவிப்பு

சென்னை: வான் சாகச நிகழ்ச்சியையொட்டி, சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தாமதமாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் வருகிற 6ம் தேதி சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக கவர்னர், தமிழக முதல்-அமைச்சர், விமானப்படை தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு ஒத்திகைகள் இன்று முதல் 5ம் தேதி வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது. விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கம் தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் என்றும், இன்று பிற்பகல் 1:45 முதல் 3.15 வரை வான்தடம் மூடப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்டோபர் 2, 3 ,5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் விமான பயண அட்டவணைகளை சரி பார்த்து பயணிகள் தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

காந்தி ஜெயந்தி விடுமுறை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம்

வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து போலி பிராண்டட் செல்போன்கள் விற்பனை

தூத்துக்குடி – சென்னை இடையே பகல் நேர ஜன சதாப்தி ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை