மெரினாவில் குளித்த போது அலையில் சிக்கிய 2 சிறுவர்கள்: விரைவாக செயல்பட்டு மீட்ட மீட்புக்குழு

சென்னை: மெரினா கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த போது அலையில் சிக்கிய 2 சிறுவர்களை மெரினா மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் பேசின்பிரிஜ் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலையில் சிக்கினர். இதனால் அவர்கள் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக கடலுக்கு சென்ற மெரினா மீட்பு குழுவினர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சிறுது நேர போராட்டத்துக்கு பின் சிறுவர்களை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதனையடுத்து சிறுவர்களுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவர்கள் கடல் அலையில் சிக்கியது தொடர்பாக அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் மெரினா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Related posts

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி

கொடைக்கானலில் திடீர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம்

பெட்டிக்கடை உரிமையாளரை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம்