மெரினாவில் நேரக் கட்டுப்பாடு இன்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு: ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பு பதில்

சென்னை: மெரினா கடற்கரை வருவோரை நேரக் கட்டுப்பாட்டு இன்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக சென்னை உயநீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜலீல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், கோடை வெப்பம் தணிக்க வருவோர் மெரினாவில் இரவு 10 மணிக்கு மேல் இருக்கக் கூடாது என கூறி போலீஸ் அப்புறப்படுத்துவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரவில் நேரக் கட்டுப்பாடு இன்றி பொதுமக்களை அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இரவு 10 மணிக்கு மேல் அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியராஜ் தெரிவித்தார். சென்னை மாநகர காவல் சட்டம் 41-ன்படி பொது இடங்களில் கூட நேரக் கட்டுப்பாடு விதிக்க அதிகாரம் உள்ளது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கோடை காலம் நிறைவடைந்துவிட்ட நிலையில் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் கோரிக்கை மனுவை பரிசீலித்து காவல்துறை முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!