Sunday, September 8, 2024
Home » மெரினா கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய 2 சிறுவர்கள் உயிருடன் மீட்பு: மெரினா மீட்பு குழுவுக்கு பாராட்டு

மெரினா கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய 2 சிறுவர்கள் உயிருடன் மீட்பு: மெரினா மீட்பு குழுவுக்கு பாராட்டு

by MuthuKumar
Published: Last Updated on

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை பொதுமக்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது 2 சிறுவர்களும் அவர்களுடன் குளித்துக்ெகாண்டிருந்தனர். திடீரென எழுந்த ராட்சத அலையில் 2 சிறுவர்கள் சிக்கினர். அவர்கள் கரைக்கு வர முயன்றும் அவர்களால் வரமுடியவில்லை. சிறிது நேரத்தில் அலையால் 2 சிறுவர்களும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

இதை பார்த்த பொதுமக்கள் உதவி கேட்டு அலறினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மெரினா மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பு சாதனங்களுடன் கடலில் இறங்கி சிறிது தொலைவு நீந்தி சென்று 2 சிறுவர்களை மீட்டனர். இருவரும் தண்ணீர் அதிகளவில் குடித்து இருந்ததால், உடனே முதல் உதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் கடல் அலையில் சிக்கிய 2 சிறுவர்கள் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பேசின் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் என்றும், இவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மெரினா கடற்கரைக்கு வந்து குளித்தது தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் 2 சிறுவர்களையும் விரைந்து செயல்பட்டு உயிருடன் மீட்ட மெரினா மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

one × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi