சிங்கப்பூர் மெரினா நீர்த்தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள தி கார்டன்ஸ் பை தி பே என்ற பூங்காவை பார்வையிட்டு அதன் பயன்பாடு குறித்துக் கேட்டறிந்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சிங்கப்பூர்: ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சிங்கப்பூர் நகரில் மெரினா நீர்த்தேக்கத்தை ஒட்டி 260 ஏக்கரில் அமைந்துள்ள தி கார்டன்ஸ் பை தி பே என்ற பூங்காவிற்கு வருகை புரிந்தார். இந்த பூங்காவில் உள்ள மூன்று நீர்முனை தோட்டங்களான மெரினா தெற்கில் உள்ள பே சவுத் கார்டன், மெரினா கிழக்கில் நிறுவனர்களின் நினைவகத்துடன் கூடிய பே ஈஸ்ட் கார்டன் மற்றும் டவுன் கோர் மற்றும் கல்லாங்கில் அமைந்துள்ள டே செண்ட்ரல் கார்டன் ஆகியவற்றிற்கு வருகை புரிந்து, அதன் சிறப்பம்சங்களை அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள பே சவுத் கார்டனில் அமைந்துள்ள மலர் குவி மாடமான உலகின் மிகப்பெரிய கண்ணாடி பசுமை இல்லத்தையும் பார்வையிட்டார். இப்பூங்காவின் சிறப்பம்சங்கள் ஆன கன்சர்வேட்டர்கள் நிலையான, கட்டிட தொழில்நுட்பங்கள் ஆற்றல் திறன் உள்ள தோட்டங்களுக்குள் அமைந்துள்ள வானிலை கல்விக்கான அறிவியல் விரிவாக்க மையத்தினையும் பார்வையிட்டார். தமிழ்நாட்டிலுள்ளநகரங்களில் பசுமையான சூழல் மற்றும் தாவர இனங்களை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டத்தினை செயல்படுத்த இந்த பயணம் உறுதுணையாக அமையும் மேற்கண்ட பயணத்தின் சிறப்பம்சங்களை தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவித்து உரிய அனுமதி பெற்று தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வின் போது தமிழ்நாடு அரசு வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வாஇ. ஆ .ப , கார்டன்ஸ் பை த பே பூங்காவின் மூத்த இயக்குனர் தினேஷ் நாயுடு மற்றும் அலுவலர் செல்வி வன்ரூ மற்றும் அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது