பல சுவையில் பாதாம் உணவுகள்!

பாதாமில் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. தினமும் 5 பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால், கொலஸ்ட்ரால் பிரச்சினை முதல் வயது முதிர்வு வரை எல்லாவித நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வகையான பிரச்சினைகளுக்கு மட்டுமில்லாமல், புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின்கள் பாதாமில் உள்ளது.

பாதாம் ஆப்பிள் சாட்

தேவையானவை:
வறுத்த பாதாம் – 60 கிராம்,
பச்சை ஆப்பிள் (நறுக்கியது) – 1 மேசைக்கரண்டி,
சிவப்பு ஆப்பிள் – 1 மேசைக்கரண்டி (நறுக்கியது),
எலுமிச்சைச் சாறு – 1/2 பழம்,
கருப்பு உப்பு – இரண்டு சிட்டிகை,
புதினா – சிறிதளவு,
ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்.

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒவ்வொன்றாக சேர்க்கவும். பிறகு நன்கு கலக்கவும். அப்படியே சாப்பிடவும். மாலைநேர ஸ்நாஸ்சிற்கு சிறந்த உணவு.

பாதாம் பீச் பழம் ரெலிஷ்

தேவையானவை:

முழு பாதாம் – 400 கிராம்,
பீச் பழம் – 350 கிராம்,
சர்க்கரை – 150 கிராம்,
பட்டை – 1,
ஸ்டார் அனாசி – 1,
சிவப்பு மிளகாய் – 1,
பால்சாமிக் வினிகர் – 50 மிலி.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் முழு பாதாமினை சூடான தண்ணீரில் ஊறவைக்கவும். பதினைந்து நிமிடம் கழித்து அதன் தோலினை நீக்கவும். பீச் பழத்தினை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும். சிவப்பு மிளகாயினை நீளவாக்கில் நறுக்கி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கவும். ஒரு கடாயில் சர்க்கரையை சேர்த்து கொதிக்கவைக்கவும். அது பிரவுன் நிறமாகி கேரமலைஸ் ஆனதும் அதில் தோல் நீக்கப்பட்ட முக்கால் பாகம் முழு பாதாமினை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளறவும். இதனுடன் பீச் பழம், பட்டை, ஸ்டார் அனாசி, சிவப்பு மிளகாய் சேர்த்து கிளறவும். கடைசியில் வினிகர் சேர்த்து நன்கு சுண்டும் வரை சமைக்கவும். அதனுடன் மீதமுள்ள பாதாமினை சேர்த்து 20 நிமிடம் சிறிய தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.
பிரெடுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

பாதாம் தானிய பிரியாணி

தேவையானவை:

பார்லி – 1/2 கப்,
சிவப்பரிசி – 1/2 கப்,
தினை – 1/2 கப்,
நெய் – 2 டீஸ்பூன்,
பூண்டு நறுக்கியது – 1 டீஸ்பூன்,
இஞ்சி – 1 மேசைக்கரண்டி,
பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன்,
கேரட் நறுக்கியது – 1/2 கப்,
வெங்காயம் – 1/4 கப்,
பொடித்த மிளகு – 1/2 டீஸ்பூன்,
உப்பு – சுவைக்கு ஏற்ப,
காய்கறி வேகவைத்த தண்ணீர் அல்லது தண்ணீர் – 7 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – 1 1/2 டீஸ்பூன்,
ஸ்பிரிங் ஆனியன் – 1 1/2 டீஸ்பூன்,
பாதாம் – 1/4 கப்.

செய்முறை:

பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் சீரகம், பிரிஞ்சி இலை சேர்க்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு கேரட், பார்லி, சிவப் பரிசி, தினை, தண்ணீர் என அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் பாதாம் சேர்த்து மைக்ரோஅவனில் வைத்து 40 நிமிடம் 180 டிகிரியில் வேகவைக்கவும். தானியங்கள் வெந்ததும் கொத்தமல்லி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து உடனே பரிமாறவும்.

  • காரிகா

பாதாம் சேமியா முசாபிர்

தேவையானவை:
தோல் நீக்கி நறுக்கிய பாதாம் – 1/2 கப்,
சேமியா – 2 கப்,
நெய் – 3 மேசைக்கரண்டி,
தண்ணீர் – 1 கப்,
சர்க்கரை சிரப் – 1 கப்,
ஏலக்காய் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
குங்குமப்பூ – 1 சிட்டிகை,
துருவிய தேங்காய் – 1/4 கப்,
வறுத்த பாதாம் – 3 மேசைக்கரண்டி.

செய்முறை:

கடாயில் நெய்யை சேர்த்து அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் அதில் சர்க்கரை சிரப்பினை சேர்க்கவும். பிறகு அதில் வறுத்த சேமியாவையும் சேர்த்து நன்கு வேகவிடவும். பிறகு ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து கிளறவும். பிறகு இதில் துருவிய தேங்காவையும் சேர்த்து கிளறவும். தண்ணீர் சுண்டியதும் வறுத்த பாதாம் சேர்த்து அலங்கரிக்கவும்.

Related posts

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்

சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?