நடிகர் மன்சூர் அலிகான் மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதி கோரி மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்தார். மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகைகள் கூறிய கருத்தை அவதூறாக கருத முடியாது. பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். அபராதத் தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த நீதிபதி உத்தரவு அளித்துள்ளார். நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கிலும் விளம்பர நோக்கத்துக்காகவும் தொடரப்பட்டுள்ளதால் மனு தள்ளுபடி செய்தனர்

Related posts

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!