லேகியம் விற்ற மன்சூர் அலிகான்

வேலூரில் போட்டியிடும் மன்சூர் அலிகான் நேற்று காலை பொய்கை மாட்டுச்சந்தைக்கு சென்று காரில் இறங்கினார். அவரை பார்த்ததும், அங்கிருந்த பெண்களும், இளைஞர்களும், ‘அட ஆக்டர் மன்சூரு, என்றபடி வந்து செல்பி எடுத்துக் கொண்டனர். அவர்களிடம், ‘போதுமாப்பா’ என்றபடியே நடந்து சென்ற அவர் அங்கு மாடுகள் விற்க வந்தவரிடம் சென்றார். அங்கு அவற்றின் விலையை கேட்டு, ஒரு கன்று குட்டியை தூக்கி கையில் வைத்துக் கொண்டு, ‘ஏம்பா, இது ஆணா, பெண்ணா?’ என்று கேட்டார்.

இதையடுத்து அங்கு நாட்டு மருந்து மற்றும் லேகியம் விற்றுக் கொண்டிருந்தவருடன் அமர்ந்து கொண்டு ஒவ்வொரு மூலிகையின் பெயரை கேட்ட மன்சூர்அலிகான், ‘ஏம்பா, இது என்ன கருப்பு கல்லாட்டம் இருக்கு.. என்று கேட்டார். அதற்கு அவர் இது பாறை உப்பு என்றதும். பாறையா? என்றார். ஆமாங்க பாறையில் இருந்து வெட்டி எடுக்கிறாங்க. வயிற்று கோளாறுக்கு ரொம்ப நல்லது என்றார் மூலிகை விற்பவர். ‘அப்ப சரி, ஒரு 20 ரூபாவுக்கு கட்டு’ என்று அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நடையை கட்டினார். அப்போது வழக்கம்போல, ஏம்பா, எல்லாரும் எனக்கு ஓட்டு ேபாடுங்க, உங்க பிரச்னையை நான் கவனிக்கிறேன் என்றார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு