தொழில்முனைவோருக்காக பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

* பசுந்தீவன பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1 கோடியில் பசுந்தீவன புல் கரணைகள் வழங்கப்படும்.

* பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு மற்றும் இதர நிதியுதவிகள் உயர்த்தி வழங்கப்படும்.

* கால்நடை மருத்துவர்கள், விரிவாக்க அலுவலர்கள், கிராம நல ஊழியர்கள் போன்ற 3000 பணியாளர்களுக்கு பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிகள் வழங்கப்படும்.

* கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கரூர் ஒன்றியங்களில் ரூ.2.34 கோடி மதிப்பீட்டில் ஆய்வுக்கூடங்கள் நிறுவப்படும். 23 ஒன்றிய மற்றும் அனைத்து இணைய பால் பண்ணைகளின் ஆய்வுக் கூடங்கள் ரூ.9.31 கோடியில் மேம்படுத்தப்படும்.

* 150 தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களில் முதற்கட்டமாக ரூ.6.50 கோடியில் பால் பகுப்பாய்வு (கலப்படம்) கருவிகள் நிறுவப்படும்.

* பால் கொள்முதல், பாலின் தரம் மற்றும் பால் விநியோகம் ஆகியவற்றிற்கு உடனடி ஒப்புகைச் சீட்டு வழங்குவதற்கு ஏதுவாக 500 தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களில் மென்பொருள் நிறுவப்பட்டு பால் கொள்முதல் செயல்பாடுகள் Cloud Based Connectivity மூலம் கண்காணிக்கப்படும்.

* சிவகங்கை ஒன்றியத்தின் தற்போதுள்ள பால்பாக்கெட் குளிர்பதன அறையின் கையாளும் திறன் 20,000 லிட்டரிலிருந்து 1,00,000 லிட்டராக உயர்த்தப்படும்.

* மாவட்ட ஒன்றிய மற்றும் சென்னை மாநகர பால்பண்ணைகளுக்கு ISO 22000 சான்றிதழ் பெறப்படும். புதிதாக பால் பண்ணை தொழில் துவங்க விரும்பும் தொழில் முனைவோருக்காக 2 பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையம் அமைக்கப்படும்.

Related posts

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி

ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு

நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்