ரூ7 கோடி வாங்கி ஏமாற்றியதாக புகார்; மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடி: கேரள உயர்நீதிமன்றத்தில் போலீஸ் அறிக்கை தாக்கல்


திருவனந்தபுரம்: கொச்சியை சேர்ந்த சிராஜ் என்பவர் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிராக போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், படத்தின் தயாரிப்புக்காக தன்னிடமிருந்து ரூ7 கோடி பணம் வாங்கியதாகவும், படம் வெற்றிகரமாக ஓடிய பின்னரும் ஒப்பந்தப்படி லாபமோ, வாங்கிய பணத்தையோ தரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாகிர், பாபு ஷாகிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோர் மீது கொச்சி மரடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தயாரிப்பாளர்கள் மூன்று பேரும் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், 30 நாட்களுக்கு 3 பேரையும் கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.இந்நிலையில் மரடு போலீசார் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பது: மஞ்சும்மல் பாய்ஸ் படத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.எனவே இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் மூன்று பேரின் முன்ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை