Sunday, September 8, 2024
Home » மஞ்சும்மல் பாய்ஸ்!

மஞ்சும்மல் பாய்ஸ்!

by Porselvi
Published: Last Updated on

மலையாளத்தில் ஷோபின் ஷஹிர், நாத் பாஷி, பாலு வர்கீஸ் போன்ற முன்னணி கதாப்பாத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ . படத்தை மலையாள இயக்குநர் சிதம்பரம் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு “ஜான்-இ-மான்” என்னும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் 2006ம் ஆண்டு கொடைக்கானல் சென்ற நண்பர்கள் குழுவின் உண்மைக் கதை. அங்கே பாறைகளுக்குக்கிடையே மாட்டிக் கொண்ட நண்பன் அவரைக் காப்பாற்றிய நண்பர்களின் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். கேரளா மட்டுமின்றி ஏன் கேரளாவைக் காட்டிலும் தமிழ்நாட்டில் இந்தப் படம் ஏகோபித்த வரவேற்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. படம் 100 கோடி வசூலை தொட்டுவிட்ட நிலையில் இன்னும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் தென்தமிழக மாவட்டங்களிலும் கூட சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. படத்தின் பிரதானம் ‘குணா‘ படத்தின் ‘கண்மணி அன்போடு…’ பாடல் தான். படம் நெடுக மெல்லிய இழையோடிய உயிரோட்டமாக இந்தப் பாடலும், ஒரு கட்டத்தில் படத்தின் மொத்த நாடித்துடிப்புமாகவும் இந்தப் பாடல்தான் ஒலிக்கிறது. இதனாலேயே இந்தப் படத்துடன் இணைந்து ‘குணா’ படமும், பாடலும் கூட வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இதைக் காட்டிலும் அடுத்த வைரல் படத்தின் பிரதான லொகேஷனாக விளங்கிய குணா குகைக்கு பயணங்கள், அந்தக் குகை முன்பு ரீல்ஸ், வீடியோக்கள், குகை சார்ந்த வரலாறுகள் என எங்கும் எதிலும் ‘குணா’ மயம். மேலும் குணா குகையின் இயற்பெயரான ‘டெவில்’ ஸ் கிச்சன் குறித்தத் தேடல்களும் கூகுளில் அதிகரித்துள்ளன. ஒரு நண்பன் தன் உயிரையும் கூட பொருட்படுத்தாமல் தனது நண்பனின் உயிரைக் காப்பாற்றிய கதை என்பதாலேயே நண்பர்கள் கூட்டம் இந்தப் படத்திற்கு படை எடுப்பது மட்டுமின்றி படம் குறித்த சமூக வலைத்தள போஸ்ட்களையும் தவறாமல் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2015ல் ‘பிரேமம்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பும் வைரலும் அதிகம் எனலாம்.

 

You may also like

Leave a Comment

nineteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi