மணிப்பூர் துப்பாக்கிச்சூடு பலி எண்ணிக்கை 5 ஆனது

இம்பால்: மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங்ஜாவ் பகுதியில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங்ஜாவ் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு மக்கள் விடுதலை (பிஎல்ஏ) படையினரின் (பிஎல்ஏ) துப்பாக்கிச் சூட்டின் போது காயமடைந்த 10 பேர்களில் 4 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் நேற்று ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்ட நிதி தொடர்பான பிரச்னையில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்