மணிப்பூரில் பெண்களுக்கு கொடுமை மனித நாகரிகத்திற்கு எதிரான செயல்: வானதி சீனிவாசன் கொதிப்பு

கோவை : மணிப்பூர் சம்பவம் மனித நாகரிகத்திற்கு எதிரான செயல் என்று வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜ தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் நேற்று அளித்த பேட்டி: மணிப்பூர் விவகாரம் மனித நாகரிகத்திற்கு எதிரான சகிக்க முடியாத, ஜீரணிக்க முடியாத செயல். அதில், ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்களை வைத்து பிரச்னை செய்யும் மனப்பாங்கு மாற வேண்டும். அரசியலை தாண்டி பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு பெண்களுக்கு அரணாக இருக்கும். மணிப்பூர் வீடியோ சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கட்சி வேறுபாடுயின்றி இந்தியாவில் எந்த பெண்ணிற்கு பாதிப்பு ஏற்படுமானால் பாஜ, அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்